[Untitled]‎ > ‎

காரைதீவு மண்..

posted Sep 17, 2012, 6:18 AM by Web Team   [ updated Oct 30, 2012, 11:47 AM ]
காரைதீவு மண்..
(ஆக்கம்: தன்)

ஆழக்கடலலையோ தாலாட்ட வயல்காற்று மறுபுறம் சீராட்ட
வாங்கொலியோ இருபுறமும் இறைவனை கூவியே அழைத்திட
ஆலய மணிகளோ ஆங்காங்கே ஒலித்திட
காரைதீவு நாமம்பெற்ற பூமித்தாய் ஆடுகிறாள் திருப்பொன்னூஞ்சல்….

மா,பலா,வாழை என்று முக்கனியும் செழிப்பு
தென்னை, கமுகு, கொய்யா,கரும்பு, மாதுளை, என்று
நீண்டே செல்லுது அதன் உயிர்ப்பு.

எலேலோ பாட்டுக்கு பஞ்சம் இல்லை
கடலன்னை கைவிட்டு ஒருநாளும் போனதும் இல்லை..
கல்வி என்ற சொல்லே இங்கு முன்னிற்குது
அந்த கண்ணகியவள் ஆட்சியும் தான் நடக்குது.

வைகாசிமாதம் என்றால் போதும் ஐயா மனமெல்லாம்
மகிழ்ச்சி சேருமையா..

நந்தவனப்பிள்ளையார் அருள்கிடைக்குது
மகாவிஸ்னு ஆலயமும் இங்கு இருக்குது
மாவடியில் கந்தசுவாமி வீற்றிருக்கிறார்
அவர் அன்னையவளே கடலோரம் காளியாய் தானிருக்கிறாள்

வீரபத்திர சுவாமி அவர் காவல் இருக்கிறார்
பாலையடிபிள்ளையாரும் தானிருக்கிறார்
காரைதீவு மண்ணுமல்லோ செய்த புண்ணியம்
எங்கள் சித்தானைக்குட்டி குரு வாழும் மண்ணல்லோ..

முத்தமிழ் வித்தகன் பிறந்த மண்ணல்லோ
விபுலமண் என்ற பெயர் பெற்ற மண்ணல்லோ
நடராஜானந்த சுவாமி வாழ்ந்த மண்ணல்லோ
இது கல்வியாலும் பக்தியாலும் உருப்பெற்ற மண்ணல்லோ..

மண்ணின் பெருமை மாறாது காத்தே நிற்போம்
இளைஞர்களே யுவதிகளே கொஞ்சம் நில்லுங்கள்
எம் மண்ணின் பெருமை காக்க- நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.

ஆக்கம்: காரைதீவு சி.ம.கதன்

 
 
 
Comments