[Untitled]‎ > ‎

மது ஒழிப்போம் மனிதனாவோம்...

posted Sep 8, 2013, 2:06 AM by Unknown user
   சித்தம் தடுமாறி நம்
சிந்தனை கெட்டிடலாமோ
மற்றப் பிறவிகள் போல் நாமும்
மதுவிற்கடிமை ஆகிடலாமோ..??

வித்தகன் வாழ்ந்த மண்ணிது
வீணாய் வாடிடலாமோ
முத்தான எம் மக்கள்
மூடர்கள் ஆவது முறையோ..??

கேட்ட மதுவது கண்டால்
எட்ட நகர்ந்திடு நண்பா
பட்டவர் திருந்தி வந்தால் நல்ல
பண்புகள் கூறிடு நண்பா..!!

புத்தியிலா மக்களே என்றும்
புகை பிடித்திடுவார்
மதியிலா மடையரே என்றும்
மது அருந்திடுவார்..!!

மதுவிலா காரைநகரொன்று
மன்றாடி கண்டிடுவோம்;
மக்களே வாரும் இன்றே
மது ஒழித்திடுவோம்..!!!


    ஆக்கம்- புவனேந்திரன் நிரோஷன்

Comments