ஈரயிந்து மாதங்கள் சுமந்தவள் இடர்கள் துன்பங்கள் கடந்தவள் மண்ணிலே பல மாந்தரை மகான்களாக்கி தந்தவள்-தாய் ஆயிரம் உறவுகள் இங்குண்டு ஆயினும் தாய் போல் யாருண்டு கண்ணெதிரே நின்றிடும் தெய்வமவள் கண்மணியாய் உன்னை காத்திடுவாள்-தாய் உற்றாரும் சுற்றாரும் ஊராரும் உத்தம தாய்க்கு ஈடாவாரோ நீயுறங்க தன்னுறக்கம் தொலைத்தாள் நீயுணவுண்ண பட்டினி தவமிருந்தாள்-தாய் மரம்போல் நீயிருந்தாலோ மண்ணாகி உன்னை தாங்கிடுவாள் கண்போல் நீயிருந்தாலோ கண்ணிமையாகி உன்னை காத்திடுவாள்-தாய் ஆண்டுதோறும் விழாக்கள் பூசைகள் ஆண்டவனுக்கு செய்வதிலும் பெற்றவள் பாதமதை ஒரு நாளெனும் பெருமையுடன் வணங்கு பேரின்பம் பெறுவாய்... சமர்ப்பணம் - உலகிலுள்ள அத்தனைகோடி அன்னையர்க்கும்.. ஆக்கம் - புவனேந்திரன் நிரோஷன் |
[Untitled] >