உழைக்கும் உள்ளங்களே! உழைக்கும் வர்க்கமே உயிர்த்தீயினை வளர்த்திடு பாரினை பண்பானதாய் பாடுபட்டு மாற்றிடு அடக்கு முறையினை அழித்திடுவாய் இந்த அகிலத்தையே உன்னுள் அடக்கிடுவாய் துன்பமதை நீக்கிட துணிந்திடுவாய் எதிர்வரும் தடைகளை நீயும் தகர்த்திடுவாய் உன்னுடைய உழைப்பதை ஊரவன் உண்டது போதும் ஊனக்காய் நீயுழைத்து ஊலகிலே உயர்ந்திடுவாய் தங்கம் தேடிய உன்கை தரித்திரமாய் தாழ்ந்ததேனோ வைரம் தீட்டிய உன்கை வையகம் காணாது போனதேனோ முயற்சி எனும் முதல்போட்டு ஊயற்சி எனும் விடைகாண்போம் ஊழைப்பின் உத்தமத்தை உலகறியச்செய்வோம்.. ஆக்கம்- புவனேந்திரன் நிரோஷன் |
[Untitled] >