[Untitled]‎ > ‎

01.04.17- இன்றைய ராசி பலன்..(01.04.2017)

posted Mar 31, 2017, 6:19 PM by Habithas Nadaraja



 
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே  முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.   
 





ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை  அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்  சுமை அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.  






மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம்  தொந்தரவு தரும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிகம்  உழைக்க வேண்டிய நாள்.







கடகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பண வரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை  விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புகழ், கௌரவம் கூடும் நாள்.  







சிம்மம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   








கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார் கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். தடைகள் உடைபடும் நாள்.   






துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப் பட்டு முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.  பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். 






விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.   







தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.  வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும்  நாள். 







மகரம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். அநாவசியச் செலவு களை கட்டுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். 







கும்பம்: நட்பு வட்டம் விரியும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர் கள். தாயாருக்கு மருத்துவச்  செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும்  நாள்.     







மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெரு கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

Comments