[Untitled]‎ > ‎

01.04.18- இன்றைய ராசி பலன்..(01.04.2018)

posted Mar 31, 2018, 6:30 PM by Habithas Nadaraja




மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.







ரிஷபம்:  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.







மிதுனம்:புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 






கடகம்:கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தி னர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள். 







சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.  







கன்னி: மாலை 6.24 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 







துலாம்:  கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்- உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மாலை 6.24 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.







விருச்சிகம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடு ப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.   
 






தனுசு:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பி றந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.  







மகரம்: பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவுக் கிடைக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.  
             






கும்பம்:  மாலை 6.24 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவ சப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.





                                        

மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.24 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
Comments