01.04.22- இன்றைய ராசி பலன்..(01.04.2022)

posted Mar 31, 2022, 6:46 PM by Habithas Nadaraja
  • மேஷம்:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனம் தேவைப்படும் நாள்.




































































































































  • ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.













































































  • .




































  • மிதுனம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதி பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.
































































































































































  • கடகம்: உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.






















  • சிம்மம்:சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தனிப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.  உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும் . திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.






































  • கன்னி:  கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.











































































































































  • துலாம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பார்களின் நட்பு கிடைக்கும். சொத்து  வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.




















































































































  • .

























  • விருச்சிகம்: மற்றவர்களை  நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.





































































  • .





































  •  




























  • தனுசு:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்க ளுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.


















































































































  • மகரம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்தபந்தங்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.













































































































































  • கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

    .















































































































































  • மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.
Comments