[Untitled]‎ > ‎

01.05.19- இன்றைய ராசி பலன்..(01.05.2019)

posted Apr 30, 2019, 8:03 PM by Habithas Nadaraja


மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு  செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.








ரிஷபம்:உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.






மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.







கடகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.







சிம்மம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்க ளில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.






கன்னி:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.







துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக் கும் படி நடந்துக்கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.







விருச்சிகம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.







தனுசு:எதிர்ப்புகள் அடங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயா ருடன் மோதல்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.







மகரம்:தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.







கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள்  உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.






                                        
மீனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள்ஏற்படும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
Comments