01.06.20- இன்றைய ராசி பலன்..(01.06.2020)

posted May 31, 2020, 6:40 PM by Habithas Nadaraja


மேஷம்:இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 
ரிஷபம்:இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்:இன்று அலுவலகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிற்பகலுக்கு மேல் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

 கடகம்:இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். சுபகாரியங்கள் கைகூடும். இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்:உங்க வீட்டில் இன்று சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.


கன்னி:
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.


துலாம்:இன்று நீங்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை குறைக்கவும். இன்றைக்கு வேலைபளு குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.


விருச்சிகம்:இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.


தனுசு:  இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு பிரச்சினைகள் வரலாம். வண்டி வாகனங்களை பராமரிப்பதில் வீண் செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முதலீடுகளை செய்யும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.


மகரம்:இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்களின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது எங்கும் எதிலும் கவனம் தேவை.

கும்பம்:இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியும் லாபமும் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
                                        
மீனம்:இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியும் லாபமும் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
Comments