மேஷம் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாகும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். புதிய பொருட்களை வாங்கிக் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். ரிஷபம் திறமைகள் வெளிப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். கடிதங்கள் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். மிதுனம் சங்கடங்கள் அகன்று சந்தோஷங்கள் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். நாளை வரும் என நினைத்த பண வரவொன்று இன்றே வந்து சேரலாம். உத்தியோக உயர்வு ஏற்படும். கடகம் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். சொல்லைச் செயலாக்கி காட்டுவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிம்மம் நன்மைகள் நடைபெற நவகிரகங்களை வழிபட வேண்டிய நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கலாம். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். கன்னி காரிய வெற்றி ஏற்படும் நாள். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையலாம். மறதியால் சில பொருட்களை இழக்க நேரிடலாம். உடல் நலத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையலாம். துலாம் இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகிளல் வெற்றி கிட்டும் நாள். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வந்து சேரும். உற்றார், உறவினர்களின் சந்திப்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும். விருச்சகம் பணவரவு இருமடங்காகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வி.ஐ.பி.க்கள் உங்கள் வீடு தேடி வரும் வாய்ப்பு உண்டு. உடல் நலம் சீராகும். தனுசு தள்ளிப்போன தகவல்கள் தானாக முடிவடையும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரலாம். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கை கூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். மகரம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உருவாகலாம். கும்பம் தெய்வீகப் பயணங்களை மேற்கொள்ள நினைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் செய்தியன்று வந்து சேரலாம். தொழில், வியாபார நலன் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். மீனம் செல்வ வளம் பெருகும் நாள். வெளி வட்டார பழக்கம் சிறப்பாக இருக்கும். இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திருமண பேச்சுக்கள் முடிவாகலாம். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். ![]() |
கலாச்சாரம் >