01.10.17- இன்றைய ராசி பலன்..(01.10.2017)

posted Sep 30, 2017, 7:27 PM by Habithas Nadaraja
 மேஷம்:சொன்ன சொல்லை  காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசை யாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.மிதுனம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாக வும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலர் உதவு வதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கடகம்: பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டி ருந்ததை வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுக மாவார்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.
கன்னி:  குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.துலாம்:பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.விருச்சிகம்:குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். தைரியம் கூடும் நாள். தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை யும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத் தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபா ரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்:கணவன்-மனைவிக்குள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடு களால் கோபம், எரிச்சல் அடையலாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத் தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற் படும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


                                        

மீனம்:தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப் பார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
Comments