[Untitled]‎ > ‎

02.01.20- இன்றைய ராசி பலன்..(02.01.2020)

posted Jan 1, 2020, 5:00 PM by Habithas Nadaraja


மேஷம்:கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.








ரிஷபம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.






மிதுனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.







கடகம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.







சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். கோபத்தை தவிருங்கள். உங்களுடைய பலம் பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.







கன்னி:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.







துலாம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் . பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.







விருச்சிகம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.







தனுசு:எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.







மகரம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.







கும்பம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.  பழைய பிரச்னைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள் . உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.






                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள்.    திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
Comments