02.01.2014- சுபநேரங்கள்..

posted Jan 2, 2014, 8:33 AM by Unknown user
2014 ஜனவரி மாதத்திற்கான சுபநேரங்கள்..

கருத்துக்களுக்கு:  க.ரவீந்திரன் காரைதீவு,  தொ.பே: 0775073347

ஜனவரி மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க..

திகதி                       கிழமை                நட்சத்திரம்        நேரம்                           லக்கினம்

21.01. 2014           செவ்வாய்                  உத்தரம்         காலை 06.10 – 7.45          மகரம்

22.11. 2014               புதன்                         அத்தம்           காலை 06.10 – 7.45         மகரம்

இளையசகோதரத்துக்கு கஸ்டபலன் காணப்படும். இங்கு குறிப்பிடப்படாத நாட்கள்;
புதன் அஸ்தமனம் அடைவதால் குழந்தையின் கல்வி பாதிக்கப்படும் ஆகையால் நேரம் குறிப்பிடவில்லை. இலங்கை நேரம்.

ஜனவரி மாதம் வைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்..


01.01.2014      02.01.2014       07.01.2014       08.01.2014         09.01.2014      10.01.2014       11.01.2014     14.01.2014

15.01.2014      17.01.2014      18.01.2014         19.01.2014        20.01.2014       23.01.2014      24.01.2014      25.01.2014

28.01.2014      29.01.2014      30.01.2014        31.01.2014

ஜனவரி மாத சுபதினங்கள்

திகதி               கிழமை          நேரம்                       லக்கினம்

21.01.2014         புதன்           காலை 06.33 - 07.45      மகரம்

31.01.2014        வெள்ளி      மாலை 04.57 - 06.57     கர்கடகம்


ஜனவரி மாத இந்துக்களின் விசேடதினங்கள்..


11.01.2014 வைகுண்ட ஏகாதசி.   13.01.2014 போகிப்பண்டிகை.    14.01.2014 தைப்பொங்கல்.   15.01.2014 பட்டிப்பொங்கல், பூரணைவிரதம்.

17.01.2014 தைப்பூசம்.

இங்கு குறிப்பிடும் நேரங்கள் யாவும் திருக்கணிதப் பஞ்சாங்க நேரங்கள்.

ஜனவரி மாத இராசிப் பலன்.

மேடம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் உருவாகும். தொழில் மேன்மை அடையும். சகோதர வழியில் செலவுகள் அதிகமாகும். 25, 26, 27 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


இடபம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் தனதானியவிருத்தி சுமாராக இருக்கும். வரவு அதிகரிக்கும். தேகசுகம் பாதிக்கப்படும். நீர், கிட்னி என்பன சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். 01, 02, 28, 29, 30 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


மிதுனம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் வருடப்பலனில் மந்தநிலை காணப்படும். கஸ்டங்கள் அதிகமாகும். நீர், கிட்னி என்பன சம்பந்தமான சுகக்குறைவு ஏற்படும். குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். தொழில் மேன்மை அடையும். 02, 03, 04, 30, 31 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


கர்கடகம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் சுகக்குறைவு ஏற்படும். சுவாசம், ஞாபக மறதி, பாலியல் என்பன சம்பந்தமான சுகக்குறைவு ஏற்படும். சுகக்குறைவுக்காக செலவுகள் அதிகமாகும். தொழில் மந்தநிலை காணப்படும். கடுமையாக உழைக்க வேண்டும். தந்தை வழியில் செலவுகள் அதிகமாகும். 04, 05, 06 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


சிங்கம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் வருடப்பலனில் மந்தநிலை காணப்படும். மாத பிற்பகுதியில் சூடு சம்பந்தமான குடல் சம்பந்தமான சுகக்குறைவு ஏற்படும். வரவு நன்றாக அமையும். 06, 07, 08 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை. குளிர், சளி என்பன சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.


கன்னி: விஜய வருட பலன் தொடரும். மேலும் தொழில் கஸ்டம் படிப்படியாக குறையும். ஏழரைச்சனி தொடர்வதால் கஸ்டங்கள் ஏற்படும். விபத்து, உடலில் காயங்கள் ஏற்படல் என்பன உண்டாம். 04. 02. 2014 பகல் 02. 21இல் கூடிய கவனம் (இலங்கை நேரம்) தேவை. தாய்வழி யில் செலவுகள் அதிகமாகும். 09, 10, 11 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.

துலாம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் வருடப்பலனில் மந்தநிலை காணப்படும். ஏழரைச்சனி தொடர்வதால் கஸ்டபலன் காணப்பட்டாலும் யோக காரகனாக இருப்பதால் கஸ்டபலன் குறையும். மனைவி அல்லது கணவன் வழியில் செலவுகள் அதிகமாகும். 12, 13, 14 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.

விருச்சிகம்: விஜய வருட பலன் தொடரும். மேலும் வருடப்பலனில் கஸ்டபலன் தொடரும். ஏழரைச்சனி தொடர்வதால் கஸ்டபலன் காணப்படும். தனதானியவிருத்தி, புத்திரர் விடயத்தில் கஸ்டபலன் காணப்படும். இளையசகோதரம், தாய்வழியில் செலவுகள் அதிகமாகும். சுவாசம், ஞாபக மறதி, பாலியல் என்பன சம்பந்தமான சுகக்குறைவு ஏற்படும். வரவு அதிகமாகும். சேமிப்பும் உண்டு. 13, 14, 15, 16 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


தனுசு: விஜய வருட பலன் தொடரும். மேலும் தொழில் சம்பந்தமான செலவுகள் ஏற்படும். ஏழரைச்சனி தொடர்வதால் கஸ்டபலன் காணப்படும். வரவு நன்றாக அமையும். 16, 17, 18 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


மகரம்: விஜய வருட பலன் தொடரும். சுவாசம், ஞாபக மறதி, பாலியல் என்பன சம்பந்தமான சுகக்குறைவு ஏற்படும். சுகக்குறைவுக்காக செலவுகள் அதிகமாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 19, 20, 21 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.


கும்பம்: விஜய வருட பலன் தொடரும். குடும்பத்தில் புதுவாரிசு உருவாகும். புத்திரபலன் உண்டு. விபத்து, உடலில் காயங்கள் ஏற்பட இடமுண்டு. 04.02.2014 பகல் 02.21இல் கூடிய கவணம் (இலங்கை நேரம்) தேவை. வரவு செலவு சமனாக இருக்கும். 21, 22, 23 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.

மீனம்: விஜய வருட பலன் தொடரும். தாய்வழியில் நன்மைகள் கிட்டும். கை கால் எலும்புமுறிவு, நரம்பு தளர்ச்சி, வாதம், வாயுபிடிப்பு என்பன சம்பந்தமான துன்பம் ஏற்படும். செலவுகள் அதிகமாகும். வரவு தாமதமாகும். வரவு செலவு சமனாக இருக்கும். 23, 24, 25 திகதிகளில் கஸ்டங்கள் ஏற்படும். பிரயாணத்தில் அவதானம் தேவை.

குறிப்பு : மேல் குறிபிட்டபலன் இராசிக்கும் பொருந்தும் லக்கினத்துக்கும் பொருந்தும் எனவே முழுமையான பலன் அறிய இராசிக்கும் லக்கினத்துக்கும் சேர்த்து பலன் அறியவும். நன்றி.


கருத்துக்களுக்கு: கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் காரைதீவு, இலங்கை, Phone:- 0775073347


Comments