[Untitled]‎ > ‎

02.03.19- இன்றைய ராசி பலன்..(02.03.2019)

posted Mar 1, 2019, 6:17 PM by Habithas Nadaraja   [ updated Mar 1, 2019, 6:18 PM ]


மேஷம்:உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.








ரிஷபம்: மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக்கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். 





மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் நாள். 






கடகம்:சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை  புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அமோகமான நாள்.







சிம்மம்: சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கை
யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள். 







கன்னி: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் கணிசமாகலாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 







துலாம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட் டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.






விருச்சிகம்:  இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.ஆடை,ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 






தனுசு:மதியம் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.  மாலைப்பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.  






மகரம்: ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள். 






கும்பம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள். 






                                        
மீனம்:உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத் துக்கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
Comments