[Untitled]‎ > ‎

02.05.17- இன்றைய ராசி பலன்..(02.05.2017)

posted May 1, 2017, 6:25 PM by Habithas Nadaraja



 மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார் கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.







ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி பெறும் நாள்.



    



மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். முடங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.







கடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். போராட்டமான நாள்.






சிம்மம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.








கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சிறப்பான நாள்.





துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.







விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.







தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 







மகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.







கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.







மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

Comments