[Untitled]‎ > ‎

02.05.18- இன்றைய ராசி பலன்..(02.05.2018)

posted May 1, 2018, 6:50 PM by Habithas Nadaraja




மேஷம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.   





ரிஷபம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங் களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.   







மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள். 







கடகம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள். 







சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமை யும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 







கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளெடுக்கும் நாள். 



 



துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷ ங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.







விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  








தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.






மகரம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 







கும்பம்:உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 






                                        

மீனம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
Comments