[Untitled]‎ > ‎

02.05.21- இன்றைய ராசி பலன்..(02.05.2021)

posted May 1, 2021, 6:01 PM by Habithas Nadaraja
  • மேஷம்:கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். நன்மை நடக்கும் நாள்.

  • -




















  • ரிஷபம்:  சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.




















  • மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.





























  • கடகம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.



  • சிம்மம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.0




  • கன்னி:பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


























  • துலாம்:  சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

    .



  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அனுகூலமான பலன்கள் ஏற்படும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.




















  • தனுசு:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.




























  • மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.































  • கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரு டன் மனம் விட்டு பேசுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்


























  • மீனம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.
Comments