02.06.20- இன்றைய ராசி பலன்..(02.06.2020)

posted Jun 1, 2020, 6:22 PM by Habithas Nadaraja


மேஷம்:சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்களுக்கு மன அமைதி ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும். கடன்கள் பெருமளவு குறையும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

 
ரிஷபம்:சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
உறவினர்களால் ஏற்பட்டிருந்த பிரச்சினை தீரும்.

மிதுனம்:சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்களுடைய உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்தநிலை ஏற்படும். புதிய வியாபாரம் தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.


 கடகம்:சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டிற்கு நகர்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். தொழில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


சிம்மம்:சந்திரன் சஞ்சாரம் சாரகமாக உள்ளது. உங்க முயற்சியில் வெற்றி கிடைக்கும். சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பணவருமானத்தால் கடன்கள் குறையும். வங்கி சேமிப்பு உயரும்.


கன்னி:
சந்திரன் உங்க ராசியில் இருந்து குடும்பஸ்தானத்திற்கு நகர்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். நீங்க செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.


துலாம்:சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நன்மைகள் நடைபெறும். வருமானம் பெருகும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.


விருச்சிகம்:சந்திரன் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் பணவரவும் அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போவது நல்லது.


தனுசு:  சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் பெருமை சேரும் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். பழைய நண்பர்களுடன் பேசுவது மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


மகரம்:சந்திரன் உங்க ராசிக்கு சாதகமாக இருப்பதால் நீங்க வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பேச்சில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.


கும்பம்:சந்திரன் உங்க ராசிக்கு காலை 12 மணிவரை சாதகமில்லாத நிலையில் சஞ்சரிக்கிறார். மனதில் குழப்பம் ஏற்படும். 12 மணிக்கு மேல் இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.
                                        
மீனம்:சந்திரன் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். சந்திராஷ்டமம் வருவதால் பிற்பகலுக்கு மேல் உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். பிற்பகலுக்கு மேல் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மவுன விரதம் மன அமைதிக்கு நல்லது. உறவுகளிடம் பேசும் போது தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.
Comments