02.07.17- இன்றைய ராசி பலன்..(02.07.2017)

posted Jul 1, 2017, 7:11 PM by Habithas Nadaraja




 மேஷம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.







ரிஷபம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்று வீர்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.







மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சகோதரங் களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பால் உயரும் நாள்.







கடகம்:  குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். உங்க ளால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மனைவி வழியில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. புகழ், கௌரவம் கூடும் நாள்.







சிம்மம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நெருங்கியவர்களுக்காக சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.







கன்னி: மாலை 3.09 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.





துலாம்குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிக்கன மாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். மாலை 3.09 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவீர் கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். சிறப்பான நாள்.







தனுசு: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணம் வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.







மகரம்:மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







கும்பம்: மாலை 3.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசர முடிவு களை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானம்என மனம் செல்லும். சொந்த-பந்தங் களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். மாலை யிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.





                                        

மீனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தள்ளிப் போன விஷயங் கள் உடனே முடியும். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மாலை 3.09 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
Comments