[Untitled]‎ > ‎

02.07.18- இன்றைய ராசி பலன்..(02.07.2018)

posted Jul 1, 2018, 5:45 PM by Habithas Nadaraja



மேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உறவினருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.







ரிஷபம்:எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.









மிதுனம்:கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.







கடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.







சிம்மம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.









கன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும் பிள்ளைகள் வெகுநாள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் எதிபார்த்த நன்மை கிடைக்கும்.







துலாம்பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.









விருச்சிகம்:பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.








தனுசு:எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.






மகரம்:பணிச்சுமை உருவாகி அல்லல் தரலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சிக்கு கூடுதல் உழைப்பு தேவை. மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.







கும்பம்:உறவினரிடம் இருந்த உங்கள் மீது கொண்ட மனஸ்தாபம் சரியாகும். தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.






                                        

மீனம்: சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடக்கலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர். பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.
Comments