02.07.20- இன்றைய ராசி பலன்..(02.07.2020)

posted Jul 1, 2020, 5:55 PM by Habithas Nadaraja


மேஷம்:சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தினரிடையே நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களிடமிருந்து நல்ல தகவல் வரும்.






 
ரிஷபம்:மற்றவர்களை குறை கூறாமல் அவர்களிடம் உள்ள நிறையை பார்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் அதிருப்திக்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.







மிதுனம்:மன தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். உத்யோகத்தில் இருக்கும் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தந்தைக்கு இருந்த உடல் நலக்கோளாறுகள் நீங்கி நலம்பெறுவார்.







 கடகம்:பெற்றோருக்கு இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். வியாபாரத்தில் பிரச்னைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். அலுவலக நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 







சிம்மம்:அலுவலகத்தில் சவாலான வேலைகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள். தாயார் மூலம் நன்மைகள் உண்டு. மகனின் திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம்.







கன்னி:
விரும்பிய பொருட்களை வாங்குதில் சிறு மனக்குறை இருக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். மகனின் எதிர்காலத்தை பற்றிய கவலை ஏற்பட்டுப் பிறகு நீங்கும்.







துலாம்:எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். குடும்பச் செலவுகள் சற்று அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் கூடும். அலுவலக நண்பர்களால் சில பிரச்னைகளை சந்தக்க நேரிடலாம். வியாபாரத்தில் உள்ள பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.







விருச்சிகம்:அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் லாபம் கூடும்.







தனுசு:கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு திடீர் பணவரவு உண்டு. அலுவலகத்தில் சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்த இடத்திற்கு செல்வீர்கள் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.







மகரம்:சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு தாமதமானாலும் நல்லபடியாக முடிவடையும்.







கும்பம்:பிள்ளைகள் உங்களின் அருமையை புரிந்து கொள்வார்கள். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பூர்வ சொத்தின் மூலம் ஆதாயம் உண்டு.






                                        
மீனம்:பூர்வ சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். வருமானம் திருப்திகரமாகும். வாழ்வில் முன்னேறுவதற்கான சில வழிகளை கற்றுக் கொள்வீர்கள்.  
Comments