மேஷம்:இன்று உங்களுக்கு உங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. லாபகரமான விஷயங்கள் அனுகூலமாகும். செய்யும் தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். குடும்பப் பணிகளில் டென்ஷன் மிகுந்திருக்கும்.
ரிஷபம்:இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் மேன்மையடையும். பழைய கடன்தொல்லைகள் தீரும். உங்கள் தொழில் ரீதியான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுகபோகம் நிறைந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
.
மிதுனம்:இன்று உங்களுக்கு செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் மிகுந்திருக்கும். பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். கடன்சுமை குறையும். வீணான பிரச்னைகளினால் மன சஞ்சலம் வரும். குடும்பப் பணிகளில் நெருக்கடி குறையும். ஆன்மிகச் சிந்தனை நன்மை தரும்.
கடகம்:இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல வருமானம் வரும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலமாகும். இறையருள் கிட்டும்.
சிம்மம்:இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாள். பழைய கடன் தொல்லை நெருக்கடி தரும். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடு பாராட்டுப் பெறும். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடி தரும். ரிப்பேர் செலவினங்கள் இருக்கும்.
கன்னி:இன்று உங்களுக்கு பண வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். கடன் சுமை குறையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு மன நிறைவு தரும்.
துலாம்:இன்று உங்களுக்கு மனநிம்மதி தரும் வகையில் சூழ்நிலை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் வகையில் முன்னெச்சரிக்கை தேவை. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். இறையருள் நன்மை தரும்.
.
விருச்சிகம்:இன்று உங்கள் பிரச்சினைகளில் தெய்வபலம் பக்கபலமாக இருந்து நன்மை தரும். இன்று நீங்கள் துணிச்சலாக எடுக்கும் ஒரு முடிவு நன்மை தரும். செய்யும் தொழிலில் போட்டிகள், விமர்சனங்கள் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடு தீர்வாக அமையும்.
தனுசு:இன்று காரிய அனுகூலம் மிகுந்த நாள். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரும். வாக்குவாதத்தை தவிர்த்து சூழ்நிலையை அனுசரிக்கவும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.
மகரம்:இன்று உங்களுக்குப் பணவரவு மிகுந்திருக்கும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். எதிர்பாராத உதவி உங்கள் சிரமங்களைத் தீர்க்கும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. தர்மசிந்தனை அதிகம் இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
கும்பம்:இன்று உங்களுக்குத் தொழில் ரீதியான போட்டிகள் மிகுந்திருக்கும். முன்னெச்சரிக்கை அதிகம் தேவை. குடும்பப் பணிகள் சிரமம் தரும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வாக ஒரு நற்செய்தி உங்களுக்கு வரும். ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும்.
.
மீனம்:இன்று உங்கள் செல்வம், செல்வாக்கு மேன்மை பெறும். தர்ம சிந்தனை மன நிம்மதி தரும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். சுபச்செலவினங்கள் இருக்கும். உறவுகள் மேம்படும். ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.