மேஷம்:சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங் களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங் கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.
ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர் கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப் பாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனு கூலம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர் கள். தொட்டது துலங்கும் நாள்.
கடகம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சாதிக்கும் நாள்.
துலாம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமை கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர் களால் சங்கடங்கள் வரும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமா வார். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். இனிமையான நாள்.
கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர் களால் நன்மை உண்டு. நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.