02.10.16- இன்றைய ராசி பலன்..(02.10.2016)

posted Oct 2, 2016, 2:42 AM by Habithas Nadaraja

                   
                      

மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


மிதுனம்: : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
       
சிம்மம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி: மதியம் 1.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
துலாம்குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.   பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராக பேசி வசூலிப்பீர்கள். மதியம் 1.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உங்களுக்கு சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு:  தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டு கொண்டிருந்ததை வாங்கி தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.
கும்பம்: மதியம் 1.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.
மீனம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மதியம் மணி 1.45 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


Comments