02.10.19- இன்றைய ராசி பலன்..(02.10.2019)

posted Oct 1, 2019, 6:55 PM by Habithas Nadaraja   [ updated Oct 1, 2019, 6:56 PM ]


மேஷம்:கணவன் மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.






ரிஷபம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்தி கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.






மிதுனம்:மற்றவர்களை நம்பி எந்த வேலைகளை ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.







கடகம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.







சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில்பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். வெற்றி பெறும் நாள்.







கன்னி:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். உற்சாகமான நாள்.







துலாம்:பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன் கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்களை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.






விருச்சிகம்:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவதுநல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண்விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிற்பகல் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.






தனுசு:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற் றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களா வார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத் யோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.







மகரம்:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப் பார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் தலை மையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.








கும்பம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.





                                        
மீனம்:பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா, தியானம் என மனம் செல்லும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.
Comments