02.11.19- இன்றைய ராசி பலன்..(02.11.2019)

posted Nov 1, 2019, 6:48 PM by Habithas Nadaraja


மேஷம்:உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை தவிர்த்து சிந்தித்து செயல்படுவீர்கள். தவறுகளை புரிந்து திருத்திக் கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். முன்னேற்றமான நாள்.







ரிஷபம்:இன்று முழுவதும் சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிருங்கள். உத்தி யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டி காட்ட வேண்டாம். உங்கள் பிச்சினைகள் பற்றி கவலைக்கு உள்ளாவீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்







மிதுனம்:கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய் வழி உறவினரால் மதிக்கப் படுவீர்கள். மற்றவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். நன்மைகள் கூடும் நாள்.







கடகம்:வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிரிக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். உங்கள் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைபெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். உயரதிகாரிகள் உங்களுக்கு அணுகூலமாக இருப்பார்கள். வெற்றி பெறும் நாள்.







சிம்மம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிக ரிக்கும். கூட்டாளிகளின் ஒத்து ழைப்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.







கன்னி:எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். உங்கள் பழைய வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். அவ்வப்போது மன அமைதி இழந்து காணப்படுவீர்கள். யோகா, தியானம், ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். உத்தியோகத்தில் உயர்வு இருக்கும். தெய்வ அனுகூலம் பெறும் நாள்.







துலாம்:முயற்சிகளில் முன் னேற்றம் ஏற்படும். உங்களின் இனிமையான அணுகுமுறையால் மற்றவர் களிடம் நல்ல நட்புணர்வு வள ரும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை களை திட்டமிட்டு வெற்றிகரமாக முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.







விருச்சிகம்:கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயரதிகாரிகளை கவருவீர்கள். நல்லன நடக்கும் நாள்.







தனுசு:வீண் பதட்டத்தையும், மன குழப்பத்தையும் தவிருங்கள்.  மற்றவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள்.  பணிச்சுமை அதிகரிப்பதால் அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உத்தி யோகத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.







மகரம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு தடைகளும் உண்டாகும்.. பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அநாவசிய செலவுகளை தவிருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் பேசுங்கள். நன்கு சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்







கும்பம்:உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும். உத்தியோ கத்தில் புகழ்கூடும். கனவு நனவாகும் நாள்.






                                        
மீனம்:உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தக்க தருணத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிகரமாக அமையும். உங்கள் ஆளுமை அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை தருவார்கள். துடிப்புடன் செயல்படும் நாள்.
Comments