![]() மேஷம்: உங்கள் அணுகுமுறையை ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்:கணவன் மனைவிக்குள் அன்னியோம் பிறக்கும்.உறவினர்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை மதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள். கடகம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபர ணங்களை வாங்குவீர்கள். திரு மணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியா பாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டு வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள், உங்களை மதித்துப் பேசுவார்கள். சிம்மம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள். கன்னி:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாகச் செல வழித்துச் சேமிக்கத் தொடங் குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள் துலாம்:எதிர்ப்புக்களை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக்கான முயற்சி கள் சாதகமாக அமையும். வியா பாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தி யோகத்தில் அமைதி நிலவும் அதிகம் உழைக்க வேண்டிய நாள். விருச்சிகம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும்.புது வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சி கள் கை கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக் கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக முடிவெடுக்கும் நாள். தனுசு:கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய வர்கள், நண்பர்கள் ஆவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள். மகரம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் விமர்சனங் களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நீங்கள் நகைச் சுவைக்காகச் சொல்லக் கூடிய விஷயங்கள் கூட, சீரியசாக வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். கும்பம்:எடுத்த காரியங்களில் அதிக அலைச்சலும், பிரச்சினையும் உண்டாகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளுங்கள். மற்றவர்களைப் பகைத்து கொள்ள வேண்டாம். வாகனங்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவுலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர் களிடம் அனுசரித்து செல்லுங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள். ![]() |
கலாச்சாரம் >