03.04.17- இன்றைய ராசி பலன்..(03.04.2017)

posted Apr 2, 2017, 6:37 PM by Habithas Nadaraja



 
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு  கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.  நினைத்ததை முடிக்கும் நாள்.






ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.  முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு  கிட்டும் நாள்.







மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலை களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள்.  அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.  பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.







கடகம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள், செலவுகளால்  திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக  எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.     






சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பெற் றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின்  நிர்வாகத்திறமை வெளிப்படும். இனிமையான நாள். 








கன்னி: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சாதித்துக் காட்டும் நாள். 






துலாம்:  கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். செலவுகளைக்  குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.  
    







விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச்  சொன்னால் கோபப்படாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.  உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சிக்கனம் தேவைப்படும் நாள். 





தனுசு: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுக்  காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார்.  திடீர் யோகம் கிட்டும் நாள். 







கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.  பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு  உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். 






மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன்  கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

Comments