03.06.18- இன்றைய ராசி பலன்..(03.06.2018)

posted Jun 2, 2018, 7:26 PM by Habithas Nadaraja
மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள் புத்துணர்ச்சி பெருகும் நாள்.  மிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.போராட்டமான நாள்.    


கடகம்:மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.சிம்மம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள். 


கன்னி:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுமை படைக்கும் நாள். துலாம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.உழைப்பால் உயரும் நாள். விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.   
தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.திடீர் திருப்பம் நிறைந்த நாள்.   


மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.கும்பம்:குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும்.தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.  


                                        

மீனம்:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடு வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
Comments