03.06.19- இன்றைய ராசி பலன்..(03.06.2019)

posted Jun 2, 2019, 6:53 PM by Habithas Nadaraja


மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம்  கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.


மிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.கடகம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விருந்தினர்களின் வருகை யால்வீடு களைக்கட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.சிம்மம்:கடந்த காலசுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலித மாகும் நாள்.கன்னி:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் வர வேண்டி பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல் படும் நாள்.துலாம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும்.உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.தனுசு:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


மகரம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.கும்பம்:உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.


                                        
மீனம்:தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.
Comments