[Untitled]‎ > ‎

03.09.20- இன்றைய ராசி பலன்..(03.09.2020

posted Sep 2, 2020, 8:51 PM by Habithas Nadaraja


மேஷம்:குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 







 
ரிஷபம்:குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.








மிதுனம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள் வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.









கடகம்:குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.








சிம்மம்:சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.







கன்னி:
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும் தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். 








துலாம்: சமயோஜிதமாக பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிரிக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.








விருச்சிகம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.








தனுசு:நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மன ஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன்அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.








மகரம்:குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில்சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.








கும்பம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.







                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப் பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
Comments