03.10.14- அக்டோபர் மாத சோதிட தகவல்கள்..

posted Oct 3, 2014, 11:02 AM by Unknown user

அக்டோபர் மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க.

11.10.2014 - 22.10.2014 வரை புதன் அஸ்தமனம் அடைவதால் குழந்தையின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் நாள் குறிப்பிடப்படவில்லை. மேலும் 01.10.2014 – 30.10.2014 வரை சுக்கிரன் அஸ்தமனம் அடைவதால் நாள் குறிப்பிடப்படவில்லை.
நவம்பர் மாத அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க.

15.11.2014 – மாதஇறுதி வரை புதன் அஸ்தமனம் அடைவதால் குழந்தையின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் நாள் குறிப்பிடப்படவில்லை. மேலும் மாதஆரம்பம் – 26.11.2014 வரை சுக்கிரன் அஸ்தமனம் அடைவதாலும் 02.11.2014 – மாதஇறுதி வரை சனி அஸ்தமனம் அடைவதாலுமல் நாள் குறிப்பிடப்படவில்லை.


அக்டோபர் மாதம் வைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்.

01.10.2014 02.10.2014 03.10.2014 08.10.2014 05.09.2014 10.10.2014 11.10.2014 14.10.2014 17.10.2014 18.10.2014 22.10.2014 23.10.2014 22.10.2014 26.10.2014 27.10.2014 28.10.2014 29.10.2014 30.10.2014 31.10.2014


அக்டோபர் மாத சுபதினங்கள்.

திகதி             கிழமை     நேரம்                       லக்கினம் 
24.10.2014  வெள்ளி;   பகல் 12.24 -01.36  மகரம்.
30.10.2014  வியாழன்  பகல் 11.37 -12.49  மகரம்.


நவம்பர் மாத சுபதினங்கள்.

திகதி        கிழமை    நேரம்          லக்கினம் 
02.11.2014 ஞாயிறு         பகல் 11.37 -01.13 மகரம்.
12.11.2014 புதன்               பகல் 10.52 -12.04 மகரம். 
13.11.2014 வியாழன்       பகல் 10.53 -12.05 மகரம்.
19.11.2014 புதன்               பகல் 10.31 -11.43 மகரம். 
21.11.2014 வெள்ளி         பகல் 12.35 -01.23 கும்பம்.

இங்கு குறிப்பிடும் நேரங்கள் யாவும் திருக்கணித பஞ்சாங்க இலங்கை நேரங்கள்.


அக்டோபர் மாத சோதிட தகவல்.
 

அக்டோபர் மாத ராசிப்பலன்.

மேடராசி: இம்மாதம் தேகசுகம் பாதிக்கப்படும். விசம் சம்பந்தமான கஸ்டம் ஏற்படும். தவறிவிழல், விபத்து என்பன துன்பம் தரும். அவதானம் தேவை. குடும்ப சுகம் பாதிக்கப்படும். குடும்பத்தில் அமைதி குன்றிக்காணப்படும். பிரச்சனைகள் ஏற்படும். 18.10.2014 க்குப்பின் நன்மை கிட்டும். அன்று மதியம் அவதானமாக இருக்க வேண்டும். தொழில் நன்றாக அமையும். புகழும் கிட்டும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 26, 27 திகதிகளில் அவதானம் தேவை.

இடபராசி: இம்மாதம் சுகக்குறைவு அதிகமாகும். பெரும்பாலும் தவறிவிழல், விபத்து, நரம்பு, எலும்பு, சூடு என்பன சம்பந்தமான துன்பம் ஏற்படும். இதனால் செலவுகள் அதிகமாகும். குடும்பசுகம் நன்றாக அமையும். தொழிலில் மந்த நிலை காணப்படும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 18.10.2014 க்குப்பின் கஸ்டபலன் அதிகமாகும். பெரும்பாலும் தவறிவிழல், விபத்து என்பன சம்பந்தமான துன்பம் அதிகமாக ஏற்படும். செலவுகள் அதிகமாகும். 01, 02, 28, 29 திகதிகளில் அவதானம் தேவை.

மிதுனராசி: இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். தொழிலில் கஸ்டம் நீங்கும். புகழும் கிட்டும். குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 18.10.2014 க்குப்பின் கஸ்டபலன் அதிகமாகும். பெரும்பாலும் தவறிவிழல், விபத்து என்பன சம்பந்தமான துன்பம் அதிகமாக ஏற்படும். ஆயுத சிகிச்சைக்கு இடமுண்டு. 03, 04, 30, 31 திகதிகளில் அவதானம் தேவை.

கர்கடகராசி: இம்மாதம் கஸ்டபலன் அதிகமாகும். பெரும்பாலும் ஞாபகமறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா தவறிவிழல், விபத்து ஆயுத சிகிச்சை என்பன சம்பந்தமான துன்பம் ஏற்படும். தனதாணிய விருத்தி நல்லபடி அமையும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 05, 06, 07 திகதிகளில் அவதானம் தேவை.

சிங்கராசி: இம்மாதம் நல்ல பலன் காணப்படுகிறது. பலவழிகளில் நன்மை அதிகமாகும். ஞாபக மறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா சம்பந்தமான என்பன துன்பம் ஏற்படும். தொடர்பான செலவுகள் அதிகமாகும். தொழில் நல்லபடி அமையும். கல்வி மந்தநிலையில் காணப்படும். 18.10.2014 க்குப்பின் வாயு, கை கால் எலும்பு முறிவு அல்லது நுடம் துன்பம் ஏற்படும். 07, 08 திகதிகளில் அவதானம் தேவை.

கன்னிராசி: இம்மாதம் முழுவதும் நல்ல பலன் காணப்படும். பலவழிகளில் செலவு அதிகமாகும். 18.10.2014 க்குப்பின்குறைவடையும். தேகசுகம் நன்றாக அமையும். தொழிலில் நல்லபடி அமையும். தொழிலுக்காக அதிக செலவு ஏற்படும். கல்வி நன்கமையும். 09, 10 திகதிகளில் அவதானம் தேவை.

துலாராசி: இம்மாதம் முழுவதும் யோககாரகன் உச்சம் பெற்று நிற்பதால் நல்ல பலன் காணப்படுகிறது. தேகசுகம் நன்றாக அமையும். தொழிலில் கஸ்ட நிலை காணப்படும். தொழிலில் நல்ல வரவு ஏற்படும். கல்வி நல்லபடி அமையும். அதிக செலவு ஏற்படும். 11, 12 திகதிகளில் அவதானம் தேவை.

விருச்சிகராசி: இம்மாதம் குருவால் நல்ல பலன் ஏற்படும். வாயு, கை கால் எலும்பு முறிவு அல்லது நுடம், தவறிவிழல், விபத்து, என்பன துன்பம் தரும். செலவுகள் அதிகமாகும். கல்வி நல்லபடி அமையும். தொழில் நல்லபடி அமையும். தொழிலுக்காக அதிக செலவு ஏற்படும். 13, 14, 15, 16 திகதிகளில் அவதானம் தேவை.

தனுராசி: இம்மாதம் நல்ல பலன் மிகமிக குறைவாகக் காணப்படுகிறது. குருவால் நல்லபலன் குறைவடையும். பலவழிகளில் கஸ்டநிலை காணப்படும். நடத்தையில் மாற்றம் ஏற்படும். தேகசுகம் பாதிக்கப்படும். ஞாபக மறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா சம்பந்தமான சம்பந்தமான துன்பம் ஏற்படும். கல்வி நல்லபடி அமையும். தொழிலில் மந்தநிலை காணப்படும். புத்திரர் வழியில் செலவுகள் அதிகமாகும். 16, 17, 18 திகதிகளில் அவதானம் தேவை.

மகரராசி: இம்மாதம் தேகசுகம் நன்றாக அமையும். இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும். தொழிலில் நல்ல வரவு ஏற்படும். மேலதிகாரிகளின் நெருக்கடிகள் அதிகமாகும். கல்வி நல்லபடி அமையும். 18, 19, 20 திகதிகளில் அவதானம் தேவை.

கும்பராசி: இம்மாதம் தேகசுகம் பாதிக்கப்படும். விசம், விசநீர் ஞாபக மறதி, மூச்சுத்திணறல், ஆஸ்மா, சூடு சம்பந்தமான என்பன துன்பம் ஏற்படும். தொழிலில் கஸ்டம் நீங்கும். அரசாங்க பகை ஏற்படும். தீயவர் நட்பு கூடாது. 21, 22 திகதிகளில் அவதானம் தேவை.

மீனராசி: இம்மாதம் குருவால் நல்லபலன் ஏற்படும். பலவழிகளில் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குழப்ப நிலை காணப்படும். விபத்து, வாயு, கை கால் எலும்பு முறிவு அல்லது நுடம் என்பன துன்பம் தரும். அதனால் செலவுகள் அதிகமாகும். தொழில் நல்லபடி அமையும். வரவு தாமதமாகும். 23, 24, 25 திகதிகளில் அவதானம் தேவை. 

அக்டோபர் மாத கிரகணம்.

08.10.2014 புதன்கிழமை மாலை பூரண சந்திரகிரகணம். இலங்கையில் கிரகணம் பற்றியபடியே உதயமாகி 6மணி05நிமிடத்தில் முடிவடையும். 
மலேசியாவில் 8.33மணிக்கு முடிவடையும். மொரீசியல், தென்னாபிரிக்காவுக்கு தோற்றாது. ( சந்திர உதயம் மணி 5.59 )

24.10.2014 வெள்ளிக்கிழமை பார்சுவ சூரிய கிரகணம். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியல், தென்னாபிரிக்கா என்பவற்றில் தோற்றாது.

25.09.2014 நவராத்திரி ஆரம்பம் முடிவு.

03.10.2014 விஜய தசமி (9;.56- மறுநாள்7.24வரை தசமி)

03.10.2014 கேதாரகௌரி விரதம் ஆரம்பம் 23.10.2014 முடிவு.(பின்னிரவு 3.26)

23.10.2014 தீபாவளி

24.10.2014 கந்த சஷ;டிவிரதம் ஆரம்பம் 29.10.2014 முடிவு. (இரவு 11.11)

இங்கு குறிப்பிடும் நேரங்கள், திகதிகள் யாவும் திருக்கணித பஞ்சாங்க இலங்கை நேரங்கள்.

                                    கருத்துக்களுக்கு: கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் 
                                    விபுலானந்த வீதி, காரைதீவு, இலங்கை
                                    தொ.பே – +94775073347
Comments