03.10.15- இன்றைய ராசி பலன் (03.10.2015)

posted Oct 2, 2015, 7:14 PM by Unknown user
மேஷம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானப் பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.

ரிஷபம்

பொறுமையுடன் செயல்பட்டு பெருமை குவிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும்.

மிதுனம்

உத்தியோக மாற்றத்தால் உயர்வு காணும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் சிறு விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

கடகம்

சாமர்த்தியமான பேச்சுக்களால் சாதனை படைக்கும் நாள். தொலைபேசி வழி தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். எதிர்பாராத திடீர் பண வரவுகள் வந்து சேரும்.

கன்னி

தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தந்தை தொடர்பான காரியங்களில் அனுகூலம் கிட்டும். நீண்ட நாளைய பிரச்சினையன்றில் திசை திருப்பம் ஏற்படலாம். திருமால் வழிபாடு திருப்தி தரும்.
 
துலாம்

காலையில் கவலையும், மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

விருச்சகம்

வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வாகன மாற்றத்திற்கு முன்வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வெளி வட்டார பழக்கம் விரிவடையும்.

தனுசு

உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். உடல் நலம் சீராகும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.

மகரம்

வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க போட்ட திட்டம் கை கூடலாம்.

கும்பம்

வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழி வகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க போட்ட திட்டம் கை கூடலாம்.

மீனம்

இலக்குமி வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டு. வியாபார விரோதம் விலகும்.Comments