03.10.18- இன்றைய ராசி பலன்..(03.10.2018)

posted Oct 2, 2018, 6:28 PM by Habithas Nadarajaமேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்:இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்மிதுனம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


கடகம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப் படும் நாள். 


சிம்மம்:சொந்த-பந்தங் களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு வாங்குவது, கட்டுவது லாபகரமாக அமையும். வியாபாத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.         கன்னி: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். துலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்துசெயல்படுவார்கள். பிரச்னைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப் பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்க ளின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள். விருச்சிகம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டு வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர 
முடிவுகள் தான் காரணம் என்பதை உணர் வீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச் சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். 


தனுசு:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புதுப் பொருள் சேரும். வியாபா ரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.  


மகரம்:பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு  உதவி செய்வீர்கள். வியாபாரத்தில்பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். கும்பம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். 


                                        
மீனம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
Comments