04.02.17- இன்றைய ராசி பலன்..(04.02.2017)

posted Feb 3, 2017, 7:09 PM by Habithas Nadaraja 
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் இணக்கமாக செல்லவும். பரணி நட்சத்திரக் காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.


ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்துஉயரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். கடகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உறவினர், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுமுறையால் வெற்றி பெறும் நாள்.சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்
கன்னி: : சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

துலாம்மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நன்மை கிட்டும் நாள். விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள். தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.  
மகரம்: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத உதவி கிட்டும் நாள். 


கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள். மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.

Comments