[Untitled]‎ > ‎

04.03.17- இன்றைய ராசி பலன்..(04.03.2017)

posted Mar 3, 2017, 6:42 PM by Habithas Nadaraja



 
மேஷம்: காலை 7.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள். 






ரிஷபம்: காலை 7.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வரக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள். 
      






மிதுனம்: வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள். 







கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
     






சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். சாதிக்கும் நாள்.








கன்னி: காலை 7.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள். 






துலாம்:காலை 7.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.







விருச்சிகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.







தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள். 








மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். 






கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையைசாமர்த்தியமாகசமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 





மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.

Comments