04.05.17- இன்றைய ராசி பலன்..(04.05.2017)

posted May 3, 2017, 7:07 PM by Habithas Nadaraja மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.     மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றிக்கு வித்திடும் நாள்.  கடகம்: காலை 9.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அவசரப்பட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனநிறைவு கிட்டும் நாள்.சிம்மம்: காலை 9.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.வேலைச்சுமை மிகுந்த நாள்.
கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். கார, அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊரியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 


துலாம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.     விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.  தனுசு: காலை 9.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்து போகும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங் களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.மகரம்: காலை 9.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். நெருங்கிய சிலருக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் நாள்.
Comments