[Untitled]‎ > ‎

04.05.19- இன்றைய ராசி பலன்..(04.05.2019)

posted May 3, 2019, 7:32 PM by Habithas Nadaraja


மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனஇறுக் கங்கள் உருவாகும். அதிகவேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை புரிந்து கொள்ளமாட்டார். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.







ரிஷபம்:அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.






மிதுனம்:சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர் கள். பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். இனிமையான நாள்.







கடகம்:உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். உதவி கேட்டு வருபவர் களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.







சிம்மம்:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக் கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நேர்மறை எண்ணங் கள் வரக்கூடும்-. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.







கன்னி:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.






துலாம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சி களை ஆதரிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.








விருச்சிகம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.







தனுசு:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபா ரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
 







மகரம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.







கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.






                                        
மீனம்: கணவன்-மனைவிக்குள்  அன்யோன்யம் பிறக்கும். முகப் பொலிவுக் கூடும். செலவு களைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

Comments