04.06.22- இன்றைய ராசி பலன்..(04.06.2022)

posted Jun 3, 2022, 7:00 PM by Habithas Nadaraja
 • மேஷம்: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற் படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


 • ரிஷபம்: பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர் கள். அரசால் ஆதாயம் உண்டு.அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங் கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத் திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.


 • .
 • மிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறி யாக இருந்த வேலைகள் முடியும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புதிய பாதை தெரியும் நாள்
 • கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கா தீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்
 • சிம்மம்:குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத் தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில்  பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சல் பெருகும் நாள்
 • கன்னி:  அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள்.பிரபலங்களால் ஆதாயமடைவீர் கள். அரசால் அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப் படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

 • துலாம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். உடன்பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார் கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர் கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத் தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


 • .

 • விருச்சிகம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். • .

 •  
 • தனுசு:  சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். • மகரம்:மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


 • கும்பம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

 • மீனம்: நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
Comments