04.07.17- இன்றைய ராசி பலன்..(04.07.2017)

posted Jul 3, 2017, 6:47 PM by Habithas Nadaraja
 மேஷம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்து நிறைவேறும் நாள்.கடகம்:  முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உற வினர்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். வெற்றி பெறும் நாள்.கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர் கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.துலாம்இன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். பால்ய நண்பர் கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.மகரம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவரை சந்திப் பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறு வீர்கள். சாதிக்கும் நாள்.கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்


                                        

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
Comments