04.09.18- இன்றைய ராசி பலன்..(04.09.2018)

posted Sep 3, 2018, 6:38 PM by Habithas Nadarajaமேஷம்:துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.ரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள்உடனே முடியும்.உடல்நிலை  சீராகும். உறவினர்களால் உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனநிறைவு கிட்டும் நாள். மிதுனம்:ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியா பாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும்.உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். கடகம்:வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அநாவசியச்செலவுகளை குறைக்கப்பாருங்கள்.அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


சிம்மம்:புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.கன்னி: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.  துலாம்:குடும்பத்தில் அமைதிநிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 
 


விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் மற்றவர்களை நம்பி பெரியமுடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் ஈகோ வந்துச் செல்லும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 


தனுசு:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.மகரம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.   கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள். 


                                        
மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும்.தாயாருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
Comments