[Untitled]‎ > ‎

04.09.21- இன்றைய ராசி பலன்..(04.09.2021)

posted Sep 3, 2021, 8:24 PM by Habithas Nadaraja
  • மேஷம்:எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நல்லன நடக்கும் நாள்.






























































  • ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.





























  • .




































  • மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவா கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபா ரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.







































































  • கடகம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படு  வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.











  • சிம்மம்:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங் கள். மருத்துவ செலவுகள் ஏற் படும். அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம்தரும் நாள்.















  • கன்னி:எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவது   நல்லது .  வியாபாரத்தில்  வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல் படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை   பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.






































































  • துலாம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றம் உண்டாகும் நாள்.













































  • .

























  • விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும் தொடங்கும். புது அத்தியோயம் தொடங்கும் நாள்.
































  •  




























  • தனுசு:சந்திராஷ்டமம் என்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.






























































  • மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமை வெளிப்படும் நாள்.





































































  • கும்பம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பினை ஏற்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.










































































  • மீனம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
Comments