மேஷம் வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் சகோதர ஒற்றுமை பலப்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ரிஷபம் சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சர்யப்பட வைக்கும். மிதுனம் தேவைகள் பூர்த்தியாகும் நாள். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். வெளியூர் பயணமொன்று எதிர்பார்த்தபடியே அமையும். கடகம் விரயங்களை சுபவிரயமாக்கிக் கொள்ள வேண்டிய நாள். வீட்டை அழகாக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்படலாம். சிம்மம் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம். கன்னி செல்வாக்கு உயரும் நாள். மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்ற மாற்றினத்தவர்கள் கை கொடுத்து உதவுவர். துலாம் வாய்ப்புகள் வரிசையாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுவீர்கள். உடன்பணிபுரிபவர்களால் உருவான மனஸ்தாபம் விலகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விருச்சகம் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது. தனுசு முன்,பின் தெரியாதவர்களின் அறிமுகத்தால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். மகரம் தேக நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கலாம். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்னகள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். கும்பம் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறலாம். கௌரவம், அந்தஸ்து உயரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். மீனம் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். ஆடை, அலங்கார பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். ![]() |
கலாச்சாரம் >