[Untitled]‎ > ‎

04.10.18- இன்றைய ராசி பலன்..(04.10.2018)

posted Oct 3, 2018, 6:50 PM by Habithas Nadaraja



மேஷம்:  திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதால்கள் வந்து நீங்கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 







ரிஷபம்:சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள். 







மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.  விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.  







கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயேமுடிப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 







சிம்மம்:மறைமுக விமர்சனங்களும், எதிர்காலம் பற்றிய  பயமும் வந்து  நீங் கும். வாகனத்தில் செல்லும்போதும், சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்
சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 






கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரியமா னவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி  நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல் படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.







துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உற வினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 







விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ் நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள். 







தனுசு:சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உத்யோ கத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 







மகரம்:உற்சாகமாக எதையும் முன்னின்று செய் வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றி யடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புது முயற் சியை அதிகாரி ஆதரிப்பர். நன்மை கிட்டும் நாள்.  







கும்பம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ் வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். 






                                        
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை   நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்து வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.ம் நாள்.
Comments