![]() மேஷம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யுங்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள். மிதுனம்:வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அளவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ள அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். கடகம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப்பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். இனிமையான நாள். சிம்மம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள். கன்னி:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிகரமான செயல்பாடுகள் செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள். துலாம்:சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய் வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். வாகன வசதிப் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள். தனுசு:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள். மகரம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள். கும்பம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆதயமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ![]() |
கலாச்சாரம் >