04.12.16- இன்றைய ராசி பலன்..(04.12.2016)

posted Dec 3, 2016, 11:21 PM by Unknown user 
மேஷம்: சொன்ன சொல் லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளை கள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.  புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள். 


 


     
.  

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அசதி, சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். நீண்ட நாட்களாக தள்ளிப்  போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மகிழ்ச்சியான நாள்.  மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி  வரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில்  அலைச்சல் இருக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

 
 கடகம்: கடினமான காரி யங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில்  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். திறமைகள் வெளிப்படும் நாள். 

 

சிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண் பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம்  உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அமோகமான நாள். 
      


கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை குடும் பத்தினருடன் நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியி  ருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.துலாம்:முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி  வரும். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 
விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங் கத்தாலும், அதிகாரப்  பதவியில் இருப் பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் பற்று வரவு உயரும். வெற்றி பெறும் நாள். 
   


தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய பாதை தெரியும் நாள். மகரம்: 
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களை  நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள்  தள்ளிப் போகும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 
கும்பம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.  வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.     
   மீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறி வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற் குள் வரும். காணாமல் போன முக்கிய ஆவணம்  கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மதிப்புக் கூடும் நாள்.
Comments