04.12.18- இன்றைய ராசி பலன்..(04.12.2018)

posted Dec 3, 2018, 5:38 PM by Habithas Nadaraja



மேஷம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.







ரிஷபம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.  தொட்ட காரியம் துலங்கும் நாள். 







மிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள். 







கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்லவரன்   அமையும்.பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள்               மூலம்  லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.  உழைப்பால் உயரும் நாள்.








சிம்மம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். 







கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.






துலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.







விருச்சிகம்:சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.







தனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரியமானவர்களுக்காக  சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள்.சிறப்பான நாள்.







மகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.







கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.






                                        
மீனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கா தீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப் படும் நாள்.
Comments