![]() மேஷம்: சவாலான விஷயங்களையும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோர், மற்றும் உற்றார், உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். மற்றவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதியஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நாள். ரிஷபம்:பழைய பிரச்சினைகளை மறந்து வாழ்க்கை முன்னேற்றத் திற்காக யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி உயரதிகாரிகள் சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனைப் படைக்கும் நாள். மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள். கடகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாகப் பேசுவீர்கள். அடுத்தவரைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் உங்களைப் பற்றி விமர்சனங்கள் ஏதேனும் வந்தால் அஞ்ச வேண்டாம். சின்ன சின்ன பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்ப வேண்டாம் வளைந்து கொடுக்க வேண்டிய நாள். சிம்மம்:தனது பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். மனைவி உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள். கன்னி:வழக்குகள் சாதமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களால் ஆதாயம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும்;பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள். துலாம்:எதிர்காலத்திற்குத் தேவையானதை யோசித்து அதன்படி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவங்கள் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். விருச்சிகம்:சிறு வயது நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும் நாள். தனுசு:தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து அதன் படிசெயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்குச் சாதகமாகஇருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். தொலைத் தொடர்பால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புக்களை ஏற்பீர்கள் . வெற்றி பெறும் நாள். மகரம்:கணவன்,மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத் தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள். கும்பம்:இராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேசவேண்டாம். மற்றவர்விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு. தேவைப்படும் நாள். ![]() |
கலாச்சாரம் >