[Untitled]‎ > ‎

05.01.22- இன்றைய ராசி பலன்..(05.01.2022)

posted Jan 4, 2022, 6:00 PM by Habithas Nadaraja
  • மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.









































































































  • ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.






















































  • .




































  • மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
































































































































  • கடகம்:  பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புதியவரின்  நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.


















  • சிம்மம்:  எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.  நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.  பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்

























  • கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள்  யார்  என்பதை  கண்டறிவீர்கள். அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களை மதித்துப் பேசுவார்கள் கனவு நனவாகும் நாள்.















































































































  • துலாம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உங்களின் மறுக்கப்பட்ட  உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.




























































































  • .

























  • விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும் . பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சி திருவினையாகும் நாள்.






































  • .





































  •  




























  • தனுசு:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சிபெருகும் நாள்.


























































































  • மகரம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும் . பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.




















































































































  • கும்பம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.  வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.























































































































  • மீனம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும்படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
Comments