05.02.17- இன்றைய ராசி பலன்..(05.02.2017)

posted Feb 4, 2017, 6:18 PM by Habithas Nadaraja 
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.   


ரிஷபம்: ராசிக்குள்சந்திரன் நுழைவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத் தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். மிதுனம்: திடீர் பயண ங்களும், செலவு களும் வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். போராடி வெல்லும் நாள். கடகம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சிறப்பான நாள். சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.    
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், காரியத் தாமதம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிபடி செயல்படும் நாள். 


துலாம்சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர் கள். சகோதர வகையில் பயனடைவீர்கள்.கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள். 
மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள். 


கும்பம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். தாயா ருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். மீனம்:சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார் கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

Comments